கோவை: கோவையில் நேற்று முன்தினம் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, தெற்கு தொகுதியில் போட்டியிடக் கூடிய பாரதிய ஜனதா வேட்பாளர், வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கோவை: கோவையில் நேற்று முன்தினம் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, தெற்கு தொகுதியில் போட்டியிடக் கூடிய பாரதிய ஜனதா வேட்பாளர், வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, வானதி சீனிவாசன் உடன் நேருக்கு நேர் விவாதிக்க கமலஹாசனுக்கு தைரியம் உள்ளதா? என அழைப்புவிடுத்தார். இதை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் சார்பாக "துக்கடா" அரசியல்வாதியிடம், எங்கள் தலைவர் விவாதிக்க தேவையில்லை, என செய்தி அறிக்கை வெளியிட்டனர்.
மேலும், இது குறித்து பதிலளித்த கமல்ஹாசன், "வானதி சீனிவாசன் உடன் விவாதிக்க, எங்கள் கட்சியின் மாணவரணி போதுமானது. மத்திய அமைச்சரே..! பிரதமர் உடனும் மத்திய அமைச்சர்களுடன் நேரடியாக விவாதிக்க தயாராக இருக்கிறேன், ஏற்பாடு செய்யவும்", என கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்தக் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கோவை தாமஸ் வீதி, கார் பார்க்கிங் அருகே பாரதிய ஜனதா மாநில மகளிர் அணி தலைவியும் சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி தலைமையில் 25-க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் ஒன்றாகக்கூடி கமலஹாசனை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் கமலஹாசன் திரைப்படத்தில் நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்கும் படங்களை கையில் வைத்திருந்தனர்.
தொடர்ந்து, கமல் அவர்களுக்கு நாங்கள் புதியதாக பெயர் வைத்துள்ளோம். எங்கள் வானதி அக்காவை துக்கடா என்று சொன்ன நீ, துப்பட்டா கமல் எனக்கூறி "துப்பட்டா" கமலை வன்மையாக கண்டிக்கிறோம் என கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்பாட்டத்தில், பாஜக மாவட்ட தலைவி ஜெயதிலகா, மாநில செயற்குழு உறுப்பினர் கீதா வசந்த், மைதிலி வினோ, முன்னாள் கவுன்சிலர் தீபா, லலிதா மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.