கோவை வடக்கு: கடந்த 20 ஆண்டுகளாக பேரூராட்சி பொறுப்புகளில் மக்கள் சேவை செய்துள்ளேன் - திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் தீவிர பிரச்சாரம்

கோவை: கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும், வ.ம. சண்முகசுந்தரம் நேற்று மாலை சாய்பாபா காலனி உட்பட்ட 10, 11, 44, 45 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.


கோவை: கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும், வ.ம. சண்முகசுந்தரம் நேற்று மாலை சாய்பாபா காலனி உட்பட்ட 10, 11, 44, 45 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.



பெருந்திரளாக கூடியிருந்த மக்களிடையே பேசிய அவர், ஊழல் ஆட்சியை அகற்ற திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்ட அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.



அப்போது அவர் பேசியதாவது:- வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் காலில் காயம் பட்டு இருப்பதாக கேள்விப்பட்டேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும். போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரது ஜாதகமும் வாக்காளர்களாகிய உங்கள் கையில் உள்ளது. இதில், யார் நல்லவர், மக்களுக்கு சேவையாற்ற கூடியவர் என்பதை சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளாக நானும், எனது மனைவியும் பேரூராட்சி பொறுப்புகளில் பணியாற்றி உள்ளோம். மக்களின் அடிப்படை தேவைகள் என்ன என்பதை நன்கு அறிந்து நிறைவேற்றி கொடுத்துள்ளோம். இந்த தொகுதி குறித்து எங்களுக்கு அனுபவ அறிவு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, நல்ல சாலைகளை தோண்டி மீண்டும் சாலை போட்டு பணத்தை கொள்ளையடித்துள்ள, அதிமுக ஊழல் ஆட்சியை அகற்ற, திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்து விட்டனர்.



தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று தலைவர், மு.க. ஸ்டாலின் தலைமையில் வளமான தமிழகம் அமையும் இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரத்தின் போது, சாய்பாபா காலனி பகுதி கழக பொறுப்பாளர் ரவி பொறுப்புக் குழு உறுப்பினர் துரைசாமி. ஆனந்தகுமார், வடவள்ளி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...