திருப்பூர்: தமிழக முதல்வரின் தாயார் குறித்து அவதூறாகப் பேசிய முன்னாள் திமுக அமைச்சர் ஆ.ராசாவைக் கண்டித்து திருப்பூரில் அதிமுகவினர் உருவபொம்மை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ.ராசா சமீபத்தில் தமிழக முதல்வர் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறாகப் பேசியதாக சர்ச்சை எழுந்தது.
ஆ.ராசாவின் பேச்சுக்கு பொதுமக்கள், மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். ஆ.ராசாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர், பெண்கள் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் திருப்பூர் காந்தி நகர் நான்கு சாலை சந்திப்பில் அதிமுகவினர் ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் ஜான், ஜெ. பேரவை மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆ.ராசாவைக் கண்டித்தும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.