கோவை: வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி முடீஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக அமுல் கந்தசாமி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் முடிஸ் பகுதிக்கு வந்த அமுல் கந்தசாமிக்கு 6 அடி மாலை அணிவித்து 108 தேங்காய் உடைத்து வரவேற்பளிக்கப்பட்டது.

தொடர்ந்து முடீஸ் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதிகளில் இருசக்கர வாகன பேரணியாகச் சென்று தீவிர வாக்கு சேகரித்தார்.
அப்போது, தேயிலைத் தோட்டப் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வால்பாறை மருத்துவமனையை தரம் உயர்த்த பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார். தொடர்ந்து வால்பாறை நகர் பகுதிகளிலும் வாக்கு சேகரித்தார்.
இந்த வாக்கு சேகரிப்பில் வேட்பாளர் அமுல் கந்தசாமியுடன் பாசறை மாவட்ட செயலாளர் சலாவுதீன், மிக்சர் கடை முருகன், கருணாகரன், பிஜேபி கே ஆர் கார்த்திக் உட்பட ஏராளமான கட்சி தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.