கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஒக்கிலிபாளையம் கிராமத்தில் திமுக பிரச்சாரத்தின் போது அதிமுக - திமுக இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒக்கிலிபாளையம் கிராமத்தில் நேற்று இரவு திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜனை ஆதரித்து சமூக ஆர்வலர் சபரிமாலா பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு சென்ற சில அதிமுகவினர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஒக்கிலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி கொடுத்த புகாரின் பேரில், பொள்ளாச்சி ஜெயராமன் அவரது மகன் பிரவீன், உதவியாளர் வீராச்சாமி, உள்ளிட்ட 8 பேர் மீது வடக்கிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதே போல, அதிமுக தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திமுகவை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வடக்கிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த ராஜமாணிக்கம், ஜெகதீசன், நாமகிரி ராஜ், ஆகிய நான்கு பேரும் ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக கூறி, இன்று மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் வடக்கிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.