இலவசங்கள் ஒரு போதும் ஏழ்மையை ஒழிக்காது - கோவை டவுன்ஹால் பரப்புரையில் கமல்ஹாசன்

கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அத்தொகுதிக்குட்பட்ட 19 வார்டுகளிலும் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அத்தொகுதிக்குட்பட்ட 19 வார்டுகளிலும் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

பாரதிபார்க், காந்திபார்க், கிராஸ் கட் ரோடு என்று பல்வேறு முக்கிய இடங்களில், பிரச்சார வாகனத்தில் இருந்தபடி மக்களிடம் பேசிய கமல்ஹாசன், மக்கள்நீதி மய்யம் என்ற குழந்தைக்கு மூன்று வயது முடிந்து தற்போது ஓடத் துவங்கி உள்ளது. அதற்குக் காரணம் நீங்கள்தான், என்றார்.



நாங்கள் மக்கள் ஆட்சியை அமைக்க வந்தவர்கள் மற்ற கட்சிகளை அகற்றுவது எங்கள் வேலை அல்ல. நீங்கள் சொல்வதை எல்லாம் செய்து காட்ட முடியுமா என்று என்னைக் கேட்கிறார்கள், நேர்மையாக செயல்படுவதன் மூலம் கொடுக்கும் வாக்குறுதிகளை சாதித்துக் காட்டுவேன், என்று கோவை டவுன்ஹால் பகுதியில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் பேசினார்.

நான் வெற்றி பெற்றால் ஒவ்வொரு வார்டிலும் எம்.எல்.ஏவின் அலுவலகத்தை அமைத்து உங்கள் குறைகளை எளிதில் அறிந்து நிவர்த்தி செய்வேன். முறையாக சுத்தம் செய்யப்படாத கழிவுநீர் கால்வாய் மற்றும் குப்பை கிடங்குகளுக்கு அருகே வாழும் மக்களின் நிலை மிக மோசமானது மற்ற கட்சிகளுக்கு அது பற்றி சிறிது கவலை கூட இல்லை. இந்நிலையை, விரைந்து மாற்றவேண்டும், அந்த மாற்றத்திற்கான வாய்ப்பை எனக்கு அளியுங்கள், என்று கேட்டுக்கொண்டார்.

இந்த முறை எனக்கு வாய்ப்பு அளியுங்கள் இதுவரை மற்ற கட்சிகள் வருடக்கணக்கில் செய்யாததை நான் நூறு நாட்களில் செய்து காட்டுகிறேன். அரசியல் என்பது எனக்கு தொழில் அல்ல கடமை.மக்கள் பணியில் இறங்கி விட்ட என்னை நீங்கள் தூக்கி நிறுத்த வேண்டாம், சிறிது ஆறுதல் கூறி ஊக்கம் அளித்தாலே போதும் நான் எனது கடமையை சிறப்பாக செய்து முடிப்பேன், என்றார்.

மேலும் பேசிய கமல், இலவசங்கள் ஒரு போதும் ஏழ்மையை ஒழிக்காது. உழைப்பு மட்டுமே ஏழ்மையை போக்க ஒரே வழி. நான் இப்பகுதியை சேர்ந்த சிலருடன் பேசினேன், எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள் எங்கள் வாழ்வை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார்கள். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது எனது கடமையாகும். 19-வார்டுகளுக்கும் எம்.எல்.ஏ அலுவலகம் இருக்கும். அதில் நீங்கள் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து கொள்ளலாம் உங்களுக்கான வேலையை தேடித் தருவது எங்கள் வேலை.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...