பொள்ளாச்சி பாலியல் வழக்கின் பின்னணியில் ஆளும்கட்சி; டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களின் பின்னணியில் ஆளும் அதிமுகவினர் இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களின் பின்னணியில் ஆளும் அதிமுகவினர் இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார்.

பொள்ளாச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கே.சுகுமார் மற்றும் வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் முருகராஜ் ஆகியோரை ஆதரித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது டிடிவி தினகரன் பேசியதாவது,

“அமைதியான நகரான பொள்ளாச்சியின் பெயருக்கு அவமானம் ஏற்படும் அளவிற்கு அநீதி இழைக்கப்பட்டது. அதன் பின்னணியில் ஆளும் கட்சியினர் இருக்கின்றனர் என்பதை அறியும் போது மரியாதைக்கும் அன்புக்கும் பெயர்போன கொங்கு மண்டலத்தில் இப்படி எல்லாம் நடக்கின்றது என தமிழ்நாடு முழுவதும் உள்ளவர்கள் வருத்தப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆட்சியில் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

திமுக குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தருவதாகவும், ஆளுங்கட்சியினர் 1500 ரூபாய் தருவதாகவும் கூறி மக்களை ஏலம் எடுக்கின்றனர். இலவசங்களை நம்பி ஏமாற வேண்டாம், இவர்கள் கூறியுள்ள இலவசங்கள் எல்லாம் அளிப்பதற்கு வருடத்திற்கு 50,000 கோடி ரூபாய் வேண்டும், அவ்வளவு பணத்துக்கு அவர்கள் எங்கே செல்வார்கள்.

அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் மாட்டிக்கொள்ளட்டும் என்று முதல்வர் இவ்வாறு அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இல்லாமல் திமுகவினர் தவித்து வருகின்றனர். முதல்வர் பழனிசாமி அரசு கஜானாவை தூர்வாரி விட்டது. திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் கஜானாவில் ஒன்றுமில்லை என்பதால் பொது மக்களின் உடமைகள் தான் பறிபோகும் தீய சக்திகளையும் தமிழின துரோகிகளையும் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டியது வாக்காளர்களின் கடமை. தமிழகத்தில் தொழில் புரட்சியை உருவாக்க அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு டிடிவி தினகரன் பரப்புரையில் ஈடுபட்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...