கோவை; பரப்புரையில் ஈடுபட்டிருந்த கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் அம்மன் கே அர்ஜுனன் சாலையில் தவறி விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
கோவை: பரப்புரையில் ஈடுபட்டிருந்த கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் அம்மன் கே அர்ஜுனன் சாலையில் தவறி விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
கோவை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் கே. அர்ஜுனன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வந்தார். கோவை கணபதி மாநகர் பகுதியில் நேற்று பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ரோட்டில் இருந்த குழியில் கால் தடுக்கி விழுந்தார். இதில் அவருடைய காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரது கால் வீங்கி விட்டது.
இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து ஒரு சில நாட்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் அவர் இன்று பரப்புரையில் ஈடுபடவில்லை. பிற அதிமுக நிர்வாகிகள் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.