கோவை: தேர்தல் பாதுகாப்பில் ஈடுபட 1000 துணை ராணுவ வீரர்கள் கோவை வந்தனர்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவப்படையினர் வர உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார். அதன்படி ஏற்கனவே 65 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர்.

இந்நிலையில் பஞ்சாபில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் கோவை ரயில் நிலையம் வந்தடைந்தனர். அவர்களை கோவை மாவட்ட மற்றும் மாநகர காவல்துறையினர் அழைத்துச் சென்று அவர்களுக்கான பணிகளை ஒதுக்கி தரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை ஒரு மாத காலத்திற்கு துணை ராணுவத்தினர் பணியில் இருப்பார்கள்.
மொத்தம் 300 கம்பெனி ராணுவப்படையினர் தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. மேலும் பல பகுதிகளில் இருந்து துணை ராணுவப் படையினர் சிறப்பு ரயில்களில் இன்று இரவு சென்னை வருகின்றனர்.