கோவை: மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை 2020ஐ நிராகரிக்கும்படி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஆதரவு கல்வியாளர் பு.ப.பிரின்ஸ்கஜேந்திரபாபு கோவை காந்திபுரம் தபெதிக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது;
“கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த இந்திய அரசமைப்புச் சட்டம், மாநில அரசு தன் மாநில மக்களின் கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்துக் கொள்ள அதிகாரம் அளிக்கிறது. கல்வி, மத்திய அரசு பட்டியலில் இல்லை; பொதுப் பட்டியலில்தான் உள்ளது.
மத்திய அரசு வகுக்கும் கொள்கைகளை அப்படியே மாநில அரசு பின்பற்ற வேண்டும், மாநில மக்களுக்காக கொள்கைகள் வகுக்கவும், சட்டம் இயற்றும் உரிமையும் இல்லை என்ற வாதத்தை முன்வைத்தால், மாநிலச் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற வேண்டிய தேவையே இல்லை.
இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கும் போக்கை தமிழக மக்கள் உணர வேண்டும்.கல்வித் துறையில் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது. சமூகநீதியின் அடிப்படையில் வலுவான பொதுக்கல்வி அமைப்பு இங்கு உள்ளது.
தேசியக் கல்விக் கொள்கை 2020, பள்ளிக் கல்வியைச் சிதைப்பதோடு, பள்ளிகளையும், கல்லூரிகளையும் வேலைக்கான திறன் அளிக்கும் மையங்களாக மாற்றிவிடுகிறது. "நீட்" போன்ற திறன் அறி தேர்வில் பெறும் மதிப்பெண்கள்தான் கல்லூரிச் சேர்க்கைக்கான தகுதியாகக் கொள்ளப் படும் என்றும் தேசியக் கல்விக் கொள்கை தெரிவிக்கிறது. இந்த ஆபத்தான கூறுகளை உணர்ந்து அதை நிராகரிக்க வேண்டும்.
சட்டப் பேரவை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமையேற்றுள்ள திமுக தனது தேர்தல் அறிக்கையில், மத்திய அரசின் புதியக்கல்விக் கொள்கையை முற்றிலுமாக நிராகரிக்கின்றோம். மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
வாக்குறுதியை மிகத் தெளிவாக அளித்துள்ள திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தமிழ் நாடு வாக்காளர்களைக் கோருகிறது.” இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறி உள்ளார்.