உடுமலை: திமுக ஆட்சியில் கச்சத்தீவு, காவிரி, மீத்தேன் உள்ளிட்ட எந்தவித பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வு காணப்படவில்லை என்று அதிமுக பேச்சாளர் நடிகை விந்தியா குற்றம் சாட்டினார்.
உடுமலை: திமுக ஆட்சியில் கச்சத்தீவு, காவிரி, மீத்தேன் உள்ளிட்ட எந்தவித பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வு காணப்படவில்லை என்று அதிமுக பேச்சாளர் நடிகை விந்தியா குற்றம் சாட்டினார்.
உடுமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி கிராமத்தில் அதிமுக நட்சத்திரப் பேச்சாளர் நடிகை விந்தியா இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது விந்தியா பேசியதாவது;
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் மேம்படும் என்று பொய் சொல்லி திமுகவினர் ஏமாற்றுவார்கள். மக்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்பவர்கள்தான் அதிமுகவினர். வராத மழைக்கு வானிலை அறிக்கை கூறுவதுபோல, வராத ஆட்சிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதிகள் கொடுக்கிறார்.
ஸ்டாலின் .100 நாட்களில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்று மக்களை ஏமாற்றுகிறார். 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.
காவிரி, கச்சத்தீவு, மீனவர்கள் மீன்பிடிப்பதில் சிக்கல், விவசாய நிலத்தில் மீத்தேன் எடுத்தல், இலங்கை இனப்படுகொலை, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை, மின்வெட்டு என எந்த ஒரு பிரச்சனையையும் திமுக தீர்க்கவில்லை. இவ்வாறு நடிகை விந்தியா பேசினார்.