பரப்புரையின்போது கோவை தங்கம் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

கோவை: வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்துக்கு ஆதரவு தெரிவித்து பரப்புரையில் ஈடுபட்டிருந்த மூத்த தலைவர் கோவை தங்கம் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்துக்கு ஆதரவு தெரிவித்து பரப்புரையில் ஈடுபட்டிருந்த மூத்த தலைவர் கோவை தங்கம் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்துக்கு ஆதரவு தெரிவித்து பரப்புரை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் ஆகியோர் வால்பாறை வந்தனர்.



வால்பாறை பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டபின்னர் காந்தி சிலை பேருந்து நிலையம் அருகில் தலைவர்கள் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரப்புரை வாகனத்தில் வேட்பாளர் ஆறுமுகத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசிக் கொண்டிருந்த மூத்த தலைவர் கோவை தங்கம், திடீரென மயக்கமடைந்து விழுந்தார்.



இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொண்டர்கள் அவரைத் தூக்கிக் கொண்டு காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் பரப்புரையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கோவை தங்கத்துக்கு உடலின் சக்கரையின் அளவு திடீரென குறைந்ததால் மயங்கி விழுந்ததாகவும் தற்போது உடல்நலம் தேறி வருவதாகவும் திமுக கூட்டணி கட்சியினர் கூறினர். குணம் அடைந்த பின்னர் மீண்டும் அவர் ஆறுமுகத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பார் என கோவை தங்கத்தின் மகன் அருள் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...