கோவை: விவசாய விளைநிலங்களைப் பாதிக்கும் கோவை கிழக்கு புறவழிசாலை திடடத்தை மாற்று வழியில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் உறுதி அளித்துள்ளார்.

கொங்கு மண்டல விவசாயிகள் பாதுகாப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பிரிமியர் நகர் பகுதியில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் பங்கேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், காரணம்பேட்டையில் இருந்து எட்டிமடை வரை விவசாய விளை நிலங்களை பாதிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் கிழக்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அப்போது விவசாயிகள் மத்தியில் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் பேசியதாவது;

“காரணம்பேட்டை-எட்டிமடை இடையே, அதே போல் நரசிம்மநாயக்கன்பாளையம்-மேட்டுபாளையம் இடையேயான கோவை கிழக்கு 6 வழி பசுமை புறவழிச்சாலை திட்டம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.
விவசாயத்தைப் பாதிக்கும் எந்தத் திட்டமாக இருந்தாலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். எனவே இந்தத் திட்டத்தால் பாதிக்கபடும் விவசாயிகள் திமுக தலைவரை சந்தித்து கோரிக்கைகளை எடுத்து வைக்க நடவடிக்கை எடுப்பேன்.
திமுக ஆட்சி அமைத்தவுடன் முதல் பணியாக விவசாய விளைநிலங்களை பாதிக்கும் கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த பாடுபடுவேன்.” இவ்வாறு திமுக வேட்பாளார் குறிச்சி பிரபாகரன் உறுதியளித்தார்.