சென்னை; பிரதமர் நரேந்திரமோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த மநீம தலைவர் கமல்ஹாசன் தயாராக இருப்பதாக அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சிகே குமரவேல் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து அண்மையில் பரப்புரை மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, வானதி சீனிவாசனுடன் கமல்ஹாசன் நேருக்கு நேராக விவாதம் நடத்த முன் வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் மநீம கொள்கைப் பரப்புச் செயலாளர் சிகே குமரவேல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“வானதி சீனிவாசனின் சவாலை ஏற்றுக் கொள்கின்றோம். இந்திய பிரதமர் நரேந்திரமோடியுடன் எங்கள் தலைவர் கமல்ஹாசன் முதலில் விவாதம் செய்ய விரும்புகிறார். அதனை அடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனும் விவாதம் செய்யவும் விரும்புகிறார்.
அடுத்தடுத்து பாஜக அமைச்சர்கள் ஒவ்வொருவருடனும் விவாதம் செய்து விட்டு, கடைசியாக வானதி சீனிவாசன் போன்ற துக்கடா தலைவர்களுடன் விவாதத்தை வைத்துக் கொள்ளலாம். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரதமருடனான நேரடி விவாதத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஏற்கனவே இரண்டு முறை தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு, இப்போது மூன்றாவது முறையாகவும் வானதி சீனிவாசன் தோற்பதற்கு தாயாராகிறார். எந்த ஆளுமையும் இல்லாத அவரோடு விவாதிக்க மநீம மாணவர் அணியே போதுமானது.” இவ்வாறு சி.கே.குமரவேல் கூறி உள்ளார்.