தீய சக்திகளையும், துரோக சக்திகளையும் விரட்டி அடிக்க வேண்டும்: பல்லடத்தில் டிடிவி தினகரன் பரப்புரை

திருப்பூர்; பல்லடத்தில் பரப்புரை மேற்கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தீய சக்திகளையும், துரோக சக்திகளையும் விரட்டி அடிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


திருப்பூர்; பல்லடத்தில் பரப்புரை மேற்கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தீய சக்திகளையும், துரோக சக்திகளையும் விரட்டி அடிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட டிடிவி தினகரன், திருப்பூர் தெற்கு தொகுதி விசாலாட்சி, பல்லடம் தொகுதி ஜோதிமணி , காங்கேயம் தொகுதி ரமேஷ் மற்றும் தேமுதிக வேட்பாளர்களான அவிநாசி தொகுதி மீரா, திருப்பூர் வடக்கு தொகுதி செல்வக்குமார் ஆகியோர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது;

“ஆளுங்கட்சி கூட்டணி, தொண்டர்களையும் மக்களையும் நம்பவில்லை. காந்தி தாத்தா படம் போட்ட பணத்தைத்தான் நம்பியுள்ளனர். அவர்கள் தேர்தலில் 50 கோடி ரூபாய் முதலீடு செய்கிறாரகள் என்றால் , அடுத்த 5 வருடத்தில் 5 ஆயிரம் கோடி எடுப்பார்கள். முதல்வர் எடப்பாடி ஆறு குளங்களை தூர்வாருவது போல கஜானாவையும் தூர்வாரிவிட்டார்.



அதே போல் பலநாள் பட்டிணி போல திமுகவினரும் காஞ்ச மாடு கம்மங் காட்டில் புகுந்தது போல் புகுவதற்குத் தயாராக உள்ளனர். நாம் பெருச்சாளிகளை விரட்டுகிறோம் என்று சொல்லிவிட்டு பேய்களை உள்ளே விட்டுவிட கூடாது.

பணத்தின் மூலம் மக்களை தங்கள் காலில் விழ வைத்து விடலாம் என ஆளும்கட்சி நினைக்கிறது. ஆனால் அவர்கள்தான் இந்த தேர்தலில் கீழே விழுந்து மண்ணைக் கவ்வப்போகிறார்கள்.

ஆடு மாடுகளை விலைக்கு வாங்குவது போல மக்களையும் வாங்க முடியும் என நினைக்கின்றனர், அதை முறியடிக்க வேண்டும். தீய சக்திகளையும் , துரோக சக்திகளையும் விரட்டி அடிக்க வேண்டும்.”

இவ்வாறு டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...