படம் பிரச்சினையில், நாட்டை விட்டே போய்விடுவேன் என்ற கமல் தான், நாட்டு மக்களுக்கு சேவை செய்ய போகிறாரா? - வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மும்பை எம் எல் ஏ பிரச்சாரம்.
கோவை: கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மகாராஷ்டிரா மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் ஆர்தமிழ்செல்வன் கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, பேசிய அவர், விஸ்வரூபம் படம் பிரச்சினையில், நாட்டை விட்டே போய் விடுவேன் என்ற கமல் தான், நாட்டு மக்களுக்கு சேவை செய்ய போகிறாரா? என்று கேள்வி எழுப்பினார்.
"தனது துயரத்தை தாங்கக்கூடிய சக்தி கமல்ஹாசனுக்கு கிடையாது. எதிர்த்து நின்று போராடுகிற தைரியம் கமலஹாசனிடம் இல்லை. ஒரு படத்தை ரிலீஸ் செய்ய முடியாத கமல்ஹாசன் தான் எங்கே சட்டமன்ற உறுப்பினராகி உங்களுக்கு சேவை செய்ய போகிறாரா?", என்று கேப்டன் ஆர்தமிழ்செல்வன் விமர்சித்தார்.
மேலும் பேசுகையில், கமல் உங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆனால், கமலை பார்க்க நீங்கள் சென்னை தான் போகணும். ஆனால், வானதி சீனிவாசனை நீங்கள் உங்கள் தொகுதியில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், என்று பேசி வாக்கு சேகரித்தார்.