ஊழலுக்கு எதிராக போட்டியிடுவதாக கூறும் கமல், திமுகவை எதிர்த்து தான் போட்டியிட வேண்டும், பாஜகவை எதிர்த்து அல்ல: வானதி சீனிவாசன்

கோவை: அ.தி.மு.க கூட்டணி சார்பில் கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆதரவு திரட்டி வரும், வானதி சீனிவாசன் இன்று கோவை வழக்கறிஞர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.


கோவை: அ.தி.மு.க கூட்டணி சார்பில் கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆதரவு திரட்டி வரும், வானதி சீனிவாசன் இன்று கோவை வழக்கறிஞர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அப்போது அங்கு வானதி சீனிவாசன் பேசும்போது, ஒரு பெண் வேட்பாளராக உங்கள் முன்பு நான் நிற்கிறேன். அதுவும் வழக்கறிஞராக இருந்து உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், அரசியலுக்கு வந்ததால், வக்கீல் தொழிலைத் தான் மிஸ் பண்ணுகிறேன். 2016 தேர்தலில் போட்டியிட நான் வந்ததில் இருந்து, இதுவரை நான் வழக்குகள் எதற்கும் செல்வதில்லை. அரசியல் என்பது வாழ்க்கையில் ஒரு லட்சியமாக எடுத்து நான் பயணம் செய்ய முடிவு எடுத்துள்ளேன்.

கடந்த 5 ஆண்டுகளாக நெசவாளர்களுக்கு, பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு, தந்தை இல்லாத குழந்தைகள் பெண் குழந்தைகளுக்கு என ஏராளமான உதவிகளை நான் செய்து வருகிறேன். கோவையில் 5 லட்ச ரூபாய் காப்பீடு திட்டத்தில் 20 ஆயிரம் பேரை இணைத்துள்ளேன். சமீபத்தில், கண் மருத்துவ முகாம் நடத்தி சுமார் 2000 பேருக்கு கண் கண்ணாடிகளை அவர்களது வீடு தேடி சென்று வழங்கியிருக்கிறேன். மத்திய அரசிடம் இருந்து நிறைய திட்டங்களைப் பெற்றுத்தர வேண்டும்.

மற்ற பெருநகரங்களை போல, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வர வேண்டும். நொய்யல் நதி சீரமைக்கப்பட்டு, கோவை நகரை சுற்றி உள்ள குளங்கள் தூர்வாரபட வேண்டும்.

மத்திய அரசிடம் பேசி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கடந்த முறை காங்கிரஸ் சார்பில் நின்ற மயூரா ஜெயக்குமார் மீண்டும் இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டு காலத்தில் அவர் இந்த தொகுதிக்கு என்ன செய்திருக்கிறார்?

மற்றொரு புறம், கமலஹாசன் நிற்கிறார். அவர் பி.ஜே.பி யை தோற்கடிக்க வேண்டும் என்று நோக்கத்தோடு இருப்பதாக கூறுகிறார். ஏன், பிஜேபியை தோற்கடிக்க வேண்டும்? ஊழலுக்கு எதிராக நிற்கிறேன் என்று கூறுகிறார். அப்படி, ஊழலுக்கு எதிராக நிற்க வேண்டுமென்றால், அவர் ஸ்டாலினுக்கு எதிராக தான் நிற்க வேண்டும். ஊழலுக்கு எதிராக நிற்பதாக கூறும் கமல், எனக்கு எதிராக ஏன் நிறக வேண்டும் அதுதான் எனக்கு புரியவில்லை. கடந்த ஐந்து ஆண்டு காலத்தில், கமலமயாருக்கு என்ன செய்திருக்கிறார் என்று கூறத் முடியுமா..?

கடந்த தேர்தலில் எனது சொத்து மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருந்தது. தற்போது அது உயர்ந்து இருக்கிறது என்றும் ஒரு சிலர் கூறி வருகிறார்கள். எனது குடும்ப சொத்துகள் பாகப் பிரிவினை மூலம் எனக்கு வந்து சேர்ந்தது. இது கூட புரியாமல் பலர் பேசி வருகிறார்கள்.

யார் சட்டமன்ற உறுப்பினராக வந்தால் இந்த ஊருக்கு நல்லது என்பதை யோசித்துப் பாருங்கள். கடந்த 30 ஆண்டுகளாக எனது பொது வாழ்க்கை பயணத்தை பார்த்தால் அது உங்களுக்கே புரியும். அனைவரையும் வாக்களிக்க சொல்லுங்கள், என்று வானதி சீனிவாசன் பேசினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...