நீலகிரியில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்; எஸ்.பி வேலுமணி உறுதி

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபடத் தெரிவித்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபடத் தெரிவித்தார்.



அதிமுக சார்பில் போடட்டியிடும் உதகை வேட்பாளர் போஜராஜன், குன்னூர் வேட்பாளர் கப்பச்சி வினோத் ஆகியோரை ஆதரித்து உதகை, குன்னூர் கோத்தகிரியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி சனிக்கிழமை பரப்புரை மேற்கொண்டார்.

பரப்புரையில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது;<\b>

“திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு போதும் முதல்வர் ஆக முடியாது கடந்த 2006-ம் ஆண்டில் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் மக்களைப் பற்றிய அக்கறை இல்லாமல் இருந்தார்.

இப்போது முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட்டு கனவு காண்கிறார். எங்கு சென்றாலும் முதல்வரைப் பற்றி குறை கூறிக்கொண்டே இருக்கிறார். அதிகாலை முதல் இரவு வரை மக்களின் பிரச்சனைகளுக்காக முதல்வர் நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் தனி கவனம் செலுத்தி அனைத்து திட்டங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு ரூபாய் 2500 வழங்கியது.

தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து இலவசத் திட்டங்களும் ஒவ்வொரு மக்களையும் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் உதகை, கூடலூர், மற்றும் குன்னூர் தொகுதிகளின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.” இவ்வாறு எஸ்.பி.வேலுமணி பேசினார்.

குன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் முதல்வருக்கு வாக்களிக்கத் தயாராகி விட்டனர். மக்களிடம் வரவேற்ப்பு அதிகரித்துள்ளது. மீண்டும் அம்மா ஆட்சி அமைவது உறுதி. நீலகிரியில் உள்ள மூன்று தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி” என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...