திமுகவினரை ஆச்சர்யபடுத்தும் வகையில் அதிமுகவினர் முறைகேடு; டிடிவி தினகரன் பரப்புரை

கோவை: திமுகவினர் ஆச்சர்யப்படும் வகையில் அதிமுகவினர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.



கோவை: திமுகவினர் ஆச்சர்யப்படும் வகையில் அதிமுகவினர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.



கோவை மாவட்டத்தில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து, சிவானந்தா காலணி பகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது டிடிவி தினகரன் பேசியதாவது:









“அதிமுக கூட்டணி துரோகக் கூட்டணி, கொங்கு மக்கள் என்றும் துரோகத்தை ஏற்க மாட்டார்கள். எம்.ஜி.ஆர்தீய சக்தி என்று கூறிய திமுகவையும் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஆதரிக்க கூடாது. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள்மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர், ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர். உண்மையான அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சியை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தால் மட்டுமே கொடுக்க முடியும்.









ஆட்சியில் இருப்பவர்களும், இருந்தவர்களும் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஊழலில் ஊறிப்போன திமுக மற்றும் அதிமுகவிற்கு ஒரே மாற்று சக்தி அமமுக தான். முதியோர் ஊதியத்தொகையை தர முடியாத எடப்பாடி பழனிசாமி, மாதந்தோறும் 1500 ரூபாய் தருவரா? உள்ளாட்சி துறை அதிகாரி ஒருவரிடம் 50 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. அது யாருடைய பணம்? ஏற்கனவே 6 லட்சம் கோடி கடனில் தமிழகம் தத்தளிக்கிறது. இவர்கள் மேலும் ஆட்சி செய்ய நேர்ந்தால் இன்னும்மோசமான நிலையை தமிழகம் சந்திக்கும், அந்த நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. மத்திய அரசின் தயவில் 4 ஆண்டுகளை அதிமுக அரசு ஓட்டி விட்டது. எடப்பாடி பழனிச்சாமி, தான் செய்த துரோகத்துக்குப் பெயர் ராஜ தந்திரம் என்று கூறிக்கொள்கிறார். எடப்பாடி பழனிசாமி கஜானாவை தூர்வாறி விட்டார்.ஊழலில் ஊறிப்போன திமுகவினரே ஆச்சரியப்படும் வகையில் அதிமுகவினர் ஊழல் செய்துள்ளனர்”. இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...