கோவை: கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனுக்காக அக்கட்சியினர் வாரசந்தைப் பகுதியில் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளராக குறிச்சி பிரபாகரன் போட்டியிடுகிறார். இன்று கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காய்கறி மார்க்கெட்டில் அமைக்கப்பட்டுள்ள வாரச்சந்தையில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முகமது யாசின் தலைமையில் ஏராளமான கட்சி தொண்டர்கள் வேட்பாளர் குறிச்சி பிரபாகரனுக்கு வாக்கு சேகரித்தனர்.
அப்போது திமுக தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வாரச் சந்தைக்கு வந்த பொதுமக்களிடம் வழங்கி ஆதரவு திரட்டினர். திமுக தலைமை கழக பேச்சாளர் தமிழ்பித்தன், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சக்தி சரண்யா உள்ளிட்ட பலர் இந்த வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.