தமிழகத்தின் கொரோனா தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியது

கோவை; தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று 2089 ஆக பதிவாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோவை; தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று 2089 ஆக பதிவாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறைந்து இருந்தது. இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்று தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 2089 என குறிப்பிடப்பட்டுள்ளது. கோவையில் கடந்த டிசம்பர் மாதம்தான் 100 பேருக்கு அதிகமாக கொரோனா தொற்றுப் பாதிப்பு பதிவாகிஇருந்தது. இந்த நிலையில் இப்போது கோவையிலும் புதிதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 100 தாண்டி உள்ளது. சென்னையிலும் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

இது குறித்து பேசிய சிஎம்சிஎச் டீன் மருத்துவர் நிர்மலா, இன்று கோவை மாவட்டத்தில் 185 பேருக்கு புதிதாக கொரோனா தொற்றுப் பரவி உள்ளது. இதில் சிஎம்சிஎச்சில் மட்டும் 76 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

ஏப்ரல் 6 ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அதற்கான பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது. பரப்புரையில் பங்கேற்போர், அதனை காணச்செல்லும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை புறம் தள்ளி விட்டு அலட்சியமாக இருக்கின்றனர். இதனால்தான் கொரோனா அதிகரிப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 1241 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்று காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...