பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜன் வார்டுதோறும் சென்று மக்களிடம் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.

பொள்ளாச்சி தொகுதியில் திமுக சார்பில் மருத்துவர் வரதராஜன் போட்டியிடுகிறார். இன்று அவர், பொள்ளாச்சி நகரபகுதியில் 6, 7 மற்றும் 8வது வார்டுகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். மருத்துவர் வரதராஜனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

7 வது வார்டு மகாலிங்கபுரம், எல்ஐசி காலனியில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த வரதராஜன் திறந்த வேனில் நின்றபடி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவருடன் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் மாவட்ட திமுக நெசவாளர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.