தொண்டாமுத்தூர் தொகுதிக்கான பிரத்யேக தேர்தல் அறிக்கை..! திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வெளியிட்டனர்!

கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இன்று திமுக அலுவலகத்தில் தொண்டாமுத்தூர் தொகுதிக்கான பிரத்யேக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இன்று திமுக அலுவலகத்தில் தொண்டாமுத்தூர் தொகுதிக்கான பிரத்யேக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில் குறிப்பாக நீர் மேலாண்மை குறித்து சிறப்பு திட்டங்கள் பின்வருமாறு;

நொய்யல் நதியின் சூழலியல் பாதிக்கப்படாத வகையில் அறிவியல் பூர்வமாக மேம்படுத்துவது, குளக்கரையில் கான்கிரீட் தளத்தை தடை செய்வது, அதிமுக ஆட்சியில் தண்ணீரை தனியார்மயம் படுத்துவதற்கான சூயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வது போன்ற முக்கிய அம்சங்களாக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

மேலும் கோவையின் முக்கிய நீர் ஆதாரங்களான உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம், செல்வ சிந்தாமணி குளம், முத்தண்ணன் குளம், போன்ற குளங்களுக்கு வரக்கூடிய சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சிறுவாணி அணையை தூர்வாரப்பட்டு குடிநீர் பெருக்கத்துக்கு வழிவகை செய்திடுவோம் என உறுதியளித்துள்ளனர்.

அதேபோல, வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்த தொண்டாமுத்தூர் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாக இருக்கக்கூடிய குளிர்பதனக் கிடங்கை அமைக்க வழிவகை செய்யப்படும் என்றனர். மேலும், அதிக எண்ணிக்கையில் உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், விவசாயம் சார்ந்த சுற்றுலா ஊக்குவிக்கப்படும் எனவும் காட்டு விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்கு அறிவியல்பூர்வமான யுத்திகளை கையாளப்பட்டு மற்றும் விலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு உரிய நிதியை பெற்றுத் தரவும் நான் வழிவகை செய்வேன் என்று கார்த்திகேய சிவசேனாபதி கூறினார்.

அதேபோல, கோவை குற்றாலம் வைதேகி நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தளங்கள் புனரமைக்கப்படும் எனவும் பூங்கா விளையாட்டு மைதானம் உடற்பயிற்சிக் கூடங்களும் அமைத்து தரப்படும் என்றார்.

குறிப்பாக, வளர்ச்சியில் பின்தங்கியுள்ள கரும்புக்கடை பகுதிக்கு தனிக் கவனம் செலுத்தப்படும். கழிவுநீர் வடிகால் முறை புனரமைக்கப்படும். தொண்டாமுத்தூர் ஆர்எஸ் புரம் கரும்புக்கடை போன்ற பகுதிகளில் அலுவலகங்கள் திறக்கப்பட்டு மக்கள் பிரச்சினைகளை விரைவில் முடிக்க திட்டமிடப்படும் என தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.



இறுதியாக எளிதாக அணுகக்கூடிய ஒரு பிரதிநிதியாக நான் இருப்பேன் என்று கார்த்திகேய சிவசேனாபதி உறுதி கூறினார்.

இதுவரை பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடிகளுக்கு வழங்கப்படாத வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும். ஆலந்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள மக்களுக்கு எளிதாக மருத்துவம் பார்க்க வழிவகை செய்யப்படும். அனைவருக்குமான அடிப்படை உரிமை சமூக நீதி மதச்சார்பின்மையை நிலைநாட்டிட பாடுபடுவேன் என்று கார்த்திகேய சிவசேனாபதி உறுதியளித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...