கோவை: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை வானதி சீனிவாசனுடன் நேரடி விவாதத்தில் பங்குபெற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி அழைப்பு விடுத்துள்ளார்.
கோவை: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை வானதி சீனிவாசனுடன் நேரடி விவாதத்தில் பங்குபெற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி அழைப்பு விடுத்துள்ளார்.
ஸ்மிருதி இராணி கமல்ஹாசனுக்கு சவால்: வானதி சீனிவாசன் அழகான தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கமலுக்கு மேடை விவாதத்திற்கு சவால் விடுத்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வானதி சீனிவாசனின் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மகளிர் அணியினர் இருசக்கர வாகன பேரணி சென்று ஆதரவு திரட்டினர்.
பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வட இந்திய பெண்கள் "போடுங்கம்மா ஓட்டு தாமரையைப் பார்த்து" என்று தமிழில் கோஷமிட்டு வாக்கு சேகரித்தனர்.
பின்னர், அதில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி, வானதி சீனிவாசனை ஆதரித்து கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட தெப்பகுளம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதன் ஒரு பகுதியாக ஸ்மிருதி இராணி இருசக்கர வாகன பேரணியில் தானும் இருசக்கர வாகனத்தை ஓட்டி பிரசாரம் செய்தார்.
வானதி சீனிவாசன்:
தேர்தலுக்கு முன்பிருந்தே இப்பகுதியில் சுய உதவிக்குழு மூலம் பெண்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம், மோடியின் மகள் என்ற திட்டத்தின் கீழ் தந்தை இல்லாத 100 பெண் குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். செல்வ மகள் திட்டத்தின் கீழ் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த தொகுதியில் மட்டும் பயன் அடைந்துள்ளார்கள். தான் வெற்றி பெற்றால் இன்னும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவேன். பெண்கள் நலன் சார்ந்த பல நலத்திட்டங்களை தான் வைத்திருக்கிறேன் என்றார்.
குடும்ப அரசியல் கட்சியல்ல:
மேலும், தனது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும் கட்சியில் பதவி கொடுக்கும் கட்சி பாஜக அல்ல. அனைத்து பெண்களுக்கும் சமமாக வாய்ப்பளிக்கும் கட்சி என்பதால்தான் என்னைப்போன்ற ஒரு சாமானிய பெண் தேசிய மகளிர் அணியின் தலைவராக ஆக முடிந்திருக்கிறது.
அதைத்தொடர்ந்து, பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு குஜராத் சமாஜ் பவனில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள ஆட்டோவில் சென்றார் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி.
பின்னர் அவர் பேசியதாவது:
குஜராத் சமாஜ் பவனில் நடந்த நிகழ்வில் வட இந்தியர்களிடம் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வாக்களிக்குமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்.
பின்னர், வாக்கு அளிப்பது கடமை மட்டுமில்லை, அது புனிதமானது. அப்படி வாக்கு அளிக்கும் போது ஏழைகளின் வாழ்வில் முன்னேற்றம் வரும். இது புன்னியமாக வந்து உங்களுக்கு சேரும். புன்னியம் என்பது வாழ்க்கையில் செல்வம் வரும், அந்த செல்வம் தாமரையில் அமர்ந்து வருமே தவிர, டார்ச்லைட்டில் அமர்ந்து அல்ல. எனவே பா.ஜ.கவிற்கு வாக்களியுங்கள் என்றார்.
ஸ்மிருதி இராணி கமல்ஹாசனுக்கு சவால்:
வானதி சீனிவாசனின் போட்டியாளரான கமல்ஹாசனுடன் தான் ஏற்கனவே விவாதித்துள்ளதை மேற்கோள் காட்டி கமல்ஹாசனை வானதி சீனிவாசனுடன் நேரடி விவாதத்தில் பங்குபெற அழைப்பு விடுத்தார்.
மேலும், மக்களின் பிரச்சினைகள், கட்சியின் கொள்கைகள், பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்த விவாதித்தால் ஆட்சி செய்யும் நிர்வாக திறன் யாருக்கு உள்ளது என்பது தெரியவரும். திட்டங்கள் குறித்தும், மக்களுக்கு செய்த சேவைகள் குறித்து விவாதிக்க கமல்ஹாசன் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.