வால்பாறையில் பஸ்சின் முன்னே ஓடிச்சென்று சாலையோரம் நின்ற சிறுத்தைக் குட்டியால் பரபரப்பு!

வால்பாறை: வால்பாறையில் பஸ்சின் முன்னே ஓடிச்சென்று சாலையோரம் பரிதவித்து நின்ற சிறுத்தைக் குட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.


வால்பாறை: வால்பாறையில் பஸ்சின் முன்னே ஓடிச்சென்று சாலையோரம் பரிதவித்து நின்ற சிறுத்தைக் குட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது சிறுத்தைகள் குட்டிகளுடன் நடமாடி வருகின்றன. இன்றும், நேற்றும் நடுமலை எஸ்டேட் பகுதியில் உள்ள சாலையில் வால்பாறையிலிருந்து அக்காமலை எஸ்டேட் பகுதிக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென இரண்டு சிறுத்தைக் குட்டிகள் பஸ்சின் முன்னே சாலையில் ஓடியது.



இதைப்பார்த்த ஓட்டுனர் சிறுத்தையை பாதுகாக்க பேருந்தை நிறுத்திவிட்டார். அப்போது மண்சுவர்மீது சிறுத்தைக் குட்டி ஏறமுடியாமல் சிறிதுநேரம் தத்தளித்து பின்பு கீழிறங்கி சாலையின் மறுபுறம் உள்ள தேயிலைச் செடிகளுக்குள் சென்று மறைந்தது. சில விநாடிகளில் மறைந்திருந்து கண்காணித்த அந்த சிறுத்தைக் குட்டியின் தாய் சிறுத்தையும் நொடிப்பொழுதில் தாவிச் சென்றது.

இதைப்பார்த்த பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். ஆனாலும் சிறுத்தைக் குட்டிகள் பாதுகாப்பாக சென்றபின்பு பேருந்தை ஓட்டுனர் ஓட்டிச் சென்றார். இதனால் பயணிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...