கோவை: மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி கோவை மகிளா கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை அன்னூர் அருகே உள்ளது அம்போதி. இங்குள்ள லக்கே பாளையத்தைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி தனது 39 வயது மனவளர்ச்சி குன்றிய மகளுடன் வசித்து வருகிறார். மேலும் வாய் பேச முடியாத மகளை எங்கு சென்றாலும் உடன் அழைத்துச் சென்று பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆடு மேய்க்க புறப்பட்ட மூதாட்டி தன் மகனையும் அழைத்துச் சென்றார். மகளை ஓரிடத்தில் உட்கார வைத்துவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் அங்கு வந்த மேட்டுப்பாளையம் இரும்பொறையைச் சேர்ந்த சரவணன் (வயது 34) என்பவர் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை புதருக்குள் தூக்கிச் சென்றார். ஆடுகளை அவிழ்த்து விட்டு திரும்பிய மூதாட்டி மகளை திடீரென மாயமானது அறிந்து தேடினார். அப்போது சரவணன் மகளை பலாத்காரம் செய்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.
இதனையடுத்து சரவணன் தப்பி ஓடினார். இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கற்பகம் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். இது குறித்த வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினிதேவி தீர்ப்பு வழங்கினார். சரவணன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.