வால்பாறை: வால்பாறை சிவன் கோயிலில் சிவனுக்கு அபிஷேகமும், துர்காதேவிக்கு சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை ஸ்ரீ சுப்ரமணிய சாமி கோயில் வளாகத்தில் உள்ள சிவன் கோயிலில் பங்குனி மாத பிரதோஷ பூஜை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நந்தி தேவர், துர்கா தேவிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நாதஸ்வரம் மேளங்கள் முழங்க சிவனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து பெண்கள் சிவனைப் போற்றிப் பாடினர்.

சிவபெருமான் பல்லக்கு வாகனத்தில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி சுவாமி கோயிலை வலம் வந்து அருள்பாலித்தார். அதன்பிறகு தீபாராதனை காட்டப்பட்டு விபூதி, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சிவனை தரிசித்தனர்.