கோவை இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற கொலை கைதி வழக்கறிஞர் ராஜவேலு சிறையில் தற்கொலை

கோவை: அம்மாசை என்ற பெண்ணை எரித்து கொலை செய்த வழக்கில் வழக்கறிஞர் தம்பதியான, ராஜவேலு மற்றும் மோகனா ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி அவர்கள் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: அம்மாசை என்ற பெண்ணை எரித்து கொலை செய்த வழக்கில் வழக்கறிஞர் தம்பதியான, ராஜவேலு மற்றும் மோகனா ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி அவர்கள் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு சிறையில் ராஜவேலு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அம்மாசை என்ற பெண் ராஜவேலு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, அந்தப் பெண்ணை எரித்து கொலை செய்துவிட்டு தன் மனைவி இறந்து விட்டார் என நாடகமாடினார். இவருடைய மனைவி மோகனா ஆந்திரா மாநிலத்தில் நிதி நிறுவனம் நடத்தி ஒரு கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தார். தன் மனைவியைக் காப்பாற்றுவதற்காக அம்மாவாசை என்ற பெண்ணை எரித்துக் கொலை செய்துவிட்டு, எனது மனைவி என மாநகராட்சியில் இறப்பு சான்றிதழ் பெற்று தன்னுடைய மனைவியை காப்பாற்றினார்.

அம்மாவாசை காணவில்லை என புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில், விசாரணையில் ராஜவேலு மற்றும் ஓட்டுனர் ஆகியோர் குற்றவாளிகள் என தெரியவந்து. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை கோர்ட் கணவன், ராஜவேலு மற்றும் மனைவி மோகனா மற்றும் டிரைவர் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.

இந்த நிலையில், இன்று மாலை ராஜவேல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் சிறைத்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...