கவுண்டம்பாளையம் தி.மு.க. வேட்பாளர் பையா (எ) கிருஷ்ணன் துடியலூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு!

கோவை: கவுண்டம்பாளையம் தி.மு.க. வேட்பாளர் பையா (எ) கிருஷ்ணன் துடியலூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: கவுண்டம்பாளையம் தி.மு.க. வேட்பாளர் பையா (எ) கிருஷ்ணன் துடியலூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



கோவை மாநகர் மேற்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் இன்று துடியலூர் பகுதியைச் சேர்ந்த 1, 2, 4, 26, 43 ஆகிய வார்டுகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதாவது வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், சமத்துவபுரம், அப்பநாயக்கன்பாளையம், கலைஞர் நகர், குமாரசாமி அவென்யூ, மீனாட்சி கார்டன், உழைப்பாளர் வீதி, டாக்டர் அம்பேத்கர் வீதி, கலைமகள் கார்டன், முத்து நகர், அரிஜன காலனி, சக்தி அவென்யூ, சேரன் காலனி மற்றும பல இடங்களில் பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.



வாக்கு சேகரிப்பின்போது பையா (எ) ஆர்.கிருஷ்ணன், `தி.மு.க. ஆட்சி அமைவதுடன் என்னை வெற்றி பெறச் செய்தால் உங்களது குறைகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் உடனடியாக தீர்த்து வைக்கப்படும்' என வாக்குறுதி அளித்தார்.

இந்த பிரச்சார பயணத்தின்போது ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் டி.பி.சுப்பிரமணியம் (தி.மு.க), சி.வி.தங்கவேலு (ம.தி.மு.க), ராமமூர்த்தி, கிருஷ்ணன் (மார்க்சிய கம்யூ.), பிரேம் (கொ.ம.தே.க), தம்பி வினோத் (விடுதலை சிறுத்தைகள்) மற்றும் தி.மு.க. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வெ.நா.பழனியப்பன், ஜோதிபாசு, பகுதி பொறுப்பாளர் அருள்குமார் மற்றும் அரசூர் பூபதி, சிங்கை ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.

மேலும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ரேவதி, ஆனந்தன், ஈஸ்வரன், அவினாசியப்பன், சாமிநாதன், ராக்கிமுத்து மற்றும் வட்ட கழகச் செயலாளர்கள் சண்முகம், ராஜசேகர், சுந்தரம், பிரபாகரன், இமயவரம்பன் ஐடி விங் சுப்பிரமணியம், ஜெயராம், நிதியரசு, தமிழ்நிதி, ராஜகோபால், வெற்றி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சின்னுராமகிருஷ்ணன், மௌனசாமி, நடராஜன், கந்தசாமி, ராமமூர்த்தி மற்றும் ம.தி.மு.க சம்பத், விஷ்வராஜ், காளிச்சாமி, சிவசங்கர், உருவை நாகராஜ் மற்றும், சி.பி.எம் ராமகிருஷ்ணன், செந்தில்குமார், விஜயா, பழனிச்சாமி மற்றும் சி.பி.ஐ சண்முகம், பாண்டியன், கிட்டுசாமி, நல்லசாமி, வி.சி.மணி, ஆறுச்சாமி, கோபால்சாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காலனி கண்ணையன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...