100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் குதிரை வண்டி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்!

கோவை: சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் குதிரை வண்டி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.


கோவை: சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் குதிரை வண்டி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் 100 சதவீதம் வாக்குபதிவு செய்ய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு சார்பில் மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக, கோவையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் குதிரை வண்டி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.



இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர் துவக்கி வைத்தார்.

பின்னர் இது குறித்து பாஸ்கரன் கூறுகையில், கோவையில் உள்ள 4 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் பொதுமக்கள் 100 சதவீதம் தங்கள் வாக்குகளை நேர்மையாக செலுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்த முடிவு செய்தோம். இதற்காக 3 குதிரை வண்டிகளில், வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் ஒட்டி மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு தேர்தல் தொடர்பான வாசகங்கள் அடங்கிய தொப்பி ஆகியவை அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த குதிரை வண்டிகள் அவினாசி சாலை, திருச்சி சாலை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும் என அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...