கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபாளையம் காந்தி பண்ணையில் காவலாளி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் சர்வோதய சங்கத்திற்கு சொந்தமான காந்தி பண்ணை உள்ளது, இந்த காந்தி பண்ணையில் சித்ரா என்ற மனைவியுடன் செல்வராஜ்(55) என்பவர் காந்தி பண்ணை வளாகத்திலேயே குடியிருந்து காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு காந்தி பண்ணையில் சுற்றுக் காவலுக்கு சென்ற செல்வராஜ் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் செல்வராஜின் மனைவி சித்ரா அருகில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர், அங்கிருந்தவர்கள் செல்வராஜன் வீட்டிற்கு வரும்போது அங்கே இருந்த இரண்டு நபர்கள் தப்பியோடிய தெரிகிறது. இதையடுத்து, மனைவி சித்ரா மற்றும் அக்கம்பக்கத்தினர் செல்வராஜை தேடி பார்த்தபோது காந்தி பண்ணை அருகே உள்ள ஒரு வழித்தடத்தில் செல்வராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கிணத்துக்கடவு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செல்வராஜின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காந்தி பண்னையில் காவலாளியாக பணியாற்றும் செல்வராஜ் இரவு சுற்றுக்காவல் சென்றபோது மர்ம நபர்கள் பண்ணை வளாகத்துக்குள் புகுந்து செல்வராஜை கல்லால் அடித்துக் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
செல்வராஜ் கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக பண்ணை வளாகத்திற்குள் வந்தார்கள், காந்தி பண்ணையில் பல்வேறு பொருட்கள் தயாரித்து வருவதால், அதை கொள்ளையடிக்க வந்த போது செல்வராஜ் கொலை செய்தார்கள் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த கொலை சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.