கோவை: அறப்போர் இயக்கத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.
அப்போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 220 டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதா என ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்திருப்பதாகவும், அதில் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என முதலமைச்சர், அமைச்சரவை, தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியதாகவும், அதை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும், அதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது..
இதனையடுத்து, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையில் இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது என்றும் அரசியல் கட்சிகள் இந்த வழக்கு குறித்து பேச வாய்ப்பிருப்பதால், வழக்கு விசாரணையை தேர்தலுக்குப் பின் ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தேர்தல் பிரச்சாரத்தில் இந்த வழக்கை எதிர்மறை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை எதிர்மறை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவை மீறி அறப்போர் இயக்கத்தினர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக அமைச்சர் வேலுமணி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு வந்தபோது, அரசியல் உள்நோக்கத்துடன் அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எஸ்.பி.வேலுமணி வழக்கு தொடர்ந்துள்ளதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக கூறிய நீதிபதிகள், அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேசவோ அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடவோ நீதிமன்றம் எந்த தடையும் விதித்திருக்கவில்லை எனவும் தெளிவு படுத்தினர்.
இதைத்தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணிக்கு நீதிபதிகள் 10 ரூபாய் அபராதம் விதித்தனர். பின்னர், எஸ்.பி.வேலுமணி தரப்பில் கோரிக்கை வைத்ததையடுத்து அபராத உத்தரவை திரும்பப் பெற்று வழக்கை தள்ளுபடி செய்தனர்.