தேங்காய்க்கு ஆண்டு முழுவதும் சீரான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - பொள்ளாச்சி தொகுதி அமமுக வேட்பாளர் உறுதி!

கோவை: தேங்காய்க்கு ஆண்டு முழுவதும் சீரான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சி தொகுதி அமமுக வேட்பாளர் சுகுமார் உறுதி அளித்துள்ளார்.


கோவை: தேங்காய்க்கு ஆண்டு முழுவதும் சீரான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சி தொகுதி அமமுக வேட்பாளர் சுகுமார் உறுதி அளித்துள்ளார்.

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் சுகுமார் தனது ஆதரவாளர்களுடன் பொள்ளாச்சி நகரப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது திமுக, அதிமுகவிற்கு மாற்றாக மக்கள் அமமுகவிற்கு செல்லும் இடங்களில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கின்றனர். தன்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் பொள்ளாச்சி மக்களின் பல்லாண்டு ஆண்டுகள் கோரிக்கையான பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், தென்னை நகரமான பொள்ளாச்சியில் விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையான ஆண்டு முழுவதும் தேங்காய்க்கு சீரான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தென்னை சார்ந்த பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி ஆவதால் பின்னலாடை நகரம் திருப்பூரைப் போல பொள்ளாச்சியை ஏற்றுமதி நகரமாக உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...