வால்பாறை: வால்பாறையில், பறக்கும் படை வாகனத்தை செலவின மேற்பார்வையாளர் கண்காணித்தார். அத்துடன் அவர் ஆவணங்களை திடீரென சோதனை செய்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் 2021-ம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வால்பாறை பகுதியில் சாலையில் செல்லும் வாகனங்களை அவர்கள் தடுத்து நிறுத்தி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதையும், அவற்றை சோதனை செய்து பறிமுதல் செய்வதையும் வீடியோ பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வால்பாறை வந்த கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் ராம் கிருஷ் கேடியா ஐ.ஆர்.எஸ். குறிப்பிட்ட பறக்கும்படை வாகனத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார். வால்பாறை நகராட்சி அலுவலகம் அருகே அந்த வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்தார். அதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 15 வாகனங்கள் மட்டும் சோதனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பல வாகனங்களை சோதனை செய்யாமலும் அனுப்பப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த பறக்கும்படை அதிகாரியிடம் செலவின பார்வையாளர் என்னுடைய வாகனமாக இருந்தாலும் சரி, எந்த அதிகாரி வாகனமாக இருந்தாலும் சரி அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்து வீடியோ எடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.