தி.மு.க. ஆட்சியில் இருளில் இருந்த தமிழகம் இப்போது மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறது: கணபதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அம்மன் அர்ஜுனன் பேச்சு!

கோவை: தி.மு.க. ஆட்சியின்போது இருட்டில் இருந்த தமிழகம் அ.தி.மு.க. ஆட்சியில் மின் மிகை மாநிலமாக ஜொலிக்கிறது என்று கணபதியில் தேர்தல் பிரசாரம் செய்த அம்மன் அர்ஜுனன் பெருமிதத்துடன் கூறினார்.


கோவை: தி.மு.க. ஆட்சியின்போது இருட்டில் இருந்த தமிழகம் அ.தி.மு.க. ஆட்சியில் மின் மிகை மாநிலமாக ஜொலிக்கிறது என்று கணபதியில் தேர்தல் பிரசாரம் செய்த அம்மன் அர்ஜுனன் பெருமிதத்துடன் கூறினார்.

கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். அவர் ரத்தினபுரி சக்தி சாலையில் பாலம் அருகே உள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து திறந்த வேனில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றுவார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான். ஆனால் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றும் கட்சி தி.மு.க. எனவே தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. அந்தக் கட்சியை மக்கள் புறக்கணித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

கோவை கணபதியில் ஆயிரக்கணக்கான சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளனர். இடநெருக்கடி, வாடகை உயர்வு போன்ற பிரச்சினைகளால் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. எனவே சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வசதிக்காக கணபதியில் ஒருங்கிணைந்த தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பேன். இதன் மூலம் தொழில்முனைவோர் பெரிதும் பயனடைவார்கள்.

கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் மின்வெட்டு தலைவிரித்தாடியது. இதனால் தொழிற்சாலை தொழில்துறையினரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அத்தகைய மின்வெட்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஏற்படும் கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு என்பதே கிடையாது, மின்மிகை மாநிலமாக ஜொலிக்கிறது. எனவே தொழிற்சாலை என தொழில்துறையினர் சிந்தித்து அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரத்தின்போது முன்னாள் கவுன்சிலர் பிரபாகரன், கமலா பிரஸ் ராஜு, ஆர்.கே.செந்தில்வேல், பாபுஜி சுவாமிகள், கணபதி ஆனந்த், டென்மார்க் ரமேஷ் சந்திரசேகர், பாப்பையா ராஜேஷ், கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...