கோவை: கோவை கிணத்துக்கடவு தொகுதியில் பாரபட்சம் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான உதவிகளை செய்வேன் என்று திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் வாக்குறுதி அளித்துள்ளார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் கிராம கிராமாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி, இன்று மதுக்கரை மத்திய ஒன்றிய பகுதியில் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் வாக்கு சேகரித்தார். இந்த நிலையில், இன்று காலை முதல் பிரிமியர் மில்ஸ், ஒத்தக்கால் மண்டபம், வேலந்தாவளம் சாலை, சீராபாளையம், போடிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிக்க வரும் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனுக்கு அந்தந்த கிராமங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
வாக்கு சேகரிக்கும் போது பேசிய திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன்...
கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் மக்களுக்குத் தேவையான எந்த உதவிகளும் அதிமுக அரசு செய்யவில்லை என்றும், கொரானா. காலத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பணம் கொடுக்க வலியுறுத்தினார்.
ஆனால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கஜானா காலி என்று சொல்லி ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்தார்.

எனவே, திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பின்னர் உடனடியாக செயல்படுத்தப்படும்.
அதேபோல் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மக்களுக்கு எந்தவித பாரபட்சம் பார்க்காமல் அனைத்து உதவிகளும் செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்து திமுக வேட்பாளர் குறித்து பிரபாகரன் பேசினார்.