கோவை: சின்னங்களை பிரபலப்படுத்தி 54 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வரும் இரண்டு திராவிட கட்சிகளை விரட்டி அடிப்பதே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருவதாக மக்கள் நீதி மய்ய கூட்டணியான சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான சரத்குமார் பேசினார்.

கோவை உடையாம்பாளையம் மற்றும் உப்பிலிபாளையம் பகுதியில் இன்று காலை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் டாக்டர் மகேந்திரனை ஆதரித்து அவர் பேசியதாவது:
கடந்த 54 ஆண்டுகளாக தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அவர்கள் நலன் காக்கவே அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். மக்கள் நலன் காக்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் இன்று மக்கள் இலவசங்களையும் கொடுக்கும் பணத்துக்கும் கையேந்தி நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காணும் நோக்கில் நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்ய கட்சியை தொடங்கியிருக்கிறார். எங்கள் இருவருக்கும் பல விஷயங்களில்
அதாவது மக்கள் நலன் காக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிக அக்கறை இருந்த காரணத்தால் நாங்கள் ஒரே கூட்டணியில் தற்போது பயணிக்க தொடங்கியுள்ளோம். இரண்டு திராவிட கட்சிகளை விரட்டி அடிப்பதே நோக்கமாக கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அவர்கள் சின்னங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி ஆண்டாண்டு காலமாக ஆட்சி செய்து வருகின்றனர். அந்த சின்னங்கள் மட்டும் இல்லை எனில் அவர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள். இதுவே நிதர்சனமான உண்மை. தமிழகத்தில் ஜாதி அரசியல் உருவாகியதற்கு இந்த இரண்டு திராவிட கட்சிகள் தான் காரணம்.

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் மகேந்திரன் ஒரு மருத்துவர் படித்தவர் பண்புள்ளவர். ஒரு மருத்துவர் நோயாளிக்கு என்ன மருந்து கொடுத்தால் அந்த நோயைத் தீர்க்க முடியும் என்பது தெரியும். அதே போல இந்த தொகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகாண என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அவருக்கு தெரியும்.
எனவே, அவருக்கு ஆதரவு தர வேண்டும் அதேபோல கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசனுக்கும் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் மக்கள் ஆதரவு தந்து மாற்றத்திற்கு வித்திட வேண்டும். எங்கள் இருவருக்கும் நடிப்பு என்பது தொழில். அரசியல் என்பது சேவை. நாங்கள் இத்தனை ஆண்டுகள் உழைத்து சம்பாதித்த பணத்தை இன்று செலவு செய்து மக்கள் நலனுக்காக தேர்தலில் போட்டியிடுகிறோம்.
ஆனால், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன் அவர்கள் எங்களைப் பார்த்து தேர்தலில் தோல்வி அடைந்தால் நடிக்கச் சென்று விடுவார் கமலஹாசன் என்று கூறியுள்ளார். நாங்கள் நடிக்கச் சென்று விடுவோம் உங்களின் நிலைமை என்ன. இதை சிந்தித்து பார்த்து பேசவேண்டும். நாகரீகமான முறையில் பேச கற்றுக்கொள்ள வேண்டும்.
கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை பார்க்கப்போனதால் கமலுக்கும் காலில் அடிபட்டு விட்டது என்று பேசுவது நாகரிகமற்ற செயல். வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. இப்படி பேசுபவர்கள் அரசியல்வாதிகளாக இருக்க தகுதியற்றவர்கள். ஓட்டுக்காக உங்களை விலை பேசுகிறார்கள் எனவே எக்காரணம் கொண்டும் பணத்துக்கு விலை போய் விடாதீர்கள். நேர்மையான முறையில் வாக்களியுங்கள் ஒரு புரட்சி காணும் நோக்கில் நாங்கள் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு இந்த தேர்தலில் மக்கள் ஆதரவு அளித்து தங்களுடைய கடமையை நிறைவேற்ற வேண்டும். இதுவே எங்கள் விருப்பம். இவ்வாறு அவர் பேசினார்.