கோவை: மக்கள் நீதி மய்யம் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் சுரபி பங்கஜ் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.க கே கே
கோவை: மக்கள் நீதி மய்யம் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் சுரபி பங்கஜ் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை கவுண்டம்பாளையம் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சுரபி பங்கஜ் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் பரப்புரை ஆற்றி வருகிறார். அதன்படி நேற்று சுப்பிரமணிய பாளையம், தொப்பம்பட்டி, ராக்கிபாளையம், அப்பநாயக்கன்பட்டி, டீச்சர்ஸ் காலனி, சிம்சன் நகர், சிவாஜி காலனி உள்ளிட்ட பகுதிகளில் தனது கட்சி சின்னமான டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது வாக்காளர் மத்தியில் பேசிய அவர், கவுண்டம்பாளையம் தொகுதியை சீரமைத்து அடிப்படை வசதிகள் செய்து தர உள்ளதாக உறுதி அளித்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களின் குறைகளை அவரிடம் தெரிவித்தனர். அதற்கு தான் வெற்றிபெற்றால் நிச்சயம் உங்கள் குறைகளை தீர்த்து வைப்பேன் என்றார்.
மேலும், மக்கள் நீதி மைய தொண்டர்கள் சுரபி பங்கஜை ஆதரித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் அப்பகுதியில் உள்ள கடைகளுக்குச் சென்று அவருக்கு ஆதரவாக வாக்கும் சேகரித்தனர்.