கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து கி.வீரமணி பிரச்சாரம்!

கோவை: கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து சுந்தராபுரம் சங்கம் வீதியில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பரப்புரை மேற்கொண்டார்.


கோவை: கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து சுந்தராபுரம் சங்கம் வீதியில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பரப்புரை மேற்கொண்டார்.



அப்போது அவர் பேசுகையில்;-

மற்ற தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. கொரோனாவால் மிக அச்சத்துடன் உள்ளோம். ஆனால், மோடி கை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் கொரோனா வராது என கூறினார்.



ஆனால், அறிவியல் ரீதியாக தான் அதை போக்க முடியும். என ஊசி மற்றும்,முக கவசம், கை கவசம் அணிந்து தான் அதை தடுக்க முடியும். இதை விட கொடுமையானது ஆர்எஸ்எஸ், பாஜக. இது, அண்ணா பெயரில் கட்சி வைத்தவர்களிடம் புகுந்து விட்டது. அதை தடுக்க ஒரே தடுப்பூசி ஸ்டாலின் தான்.

நாடு எவ்வித வளர்ச்சியும் காணவில்லை. கொரோனாவில் தான் வளர்ச்சி, வேறு எதிலும் வளர்ச்சி இல்லை. இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே எச்சரிக்கை தான் தேர்தலிலும் இருக்க வேண்டும். ஏப்ரல் 6ம் தேதி நடக்கும் தேர்தலில் நாம் ஏமாந்தால், காலம் காலமாக நம்ம சந்ததியை இழக்க வேண்டி இருக்கும். இந்த கூட்டணி கொள்கை - லட்சிய கூட்டணி. மற்ற கூட்டணி கொள்கை வேறு லட்சியம் வேறு என்கிறனர். மத வெறி, சாதி வெறி பண வெறி என அவர்கள் உள்ளனர். ஆனால், நம்ம கூட்டணி 2019க்கு முன்பே உருவானது. இந்த கூட்டணி போராட்ட களத்தில் உருவானது. மக்களை பாதுகாக்க கொள்கைக்காக சேர்ந்த கூட்டணி. அதே கூட்டணி தேர்தலிலும் தொடர்கின்றது.

தந்தை பெரியாரின் துணிவு, அண்ணாவின் அரவணைப்பு என அனைத்தையும் தெரிந்தவர் ஸ்டாலின். இந்த கூட்டணியில் இடம் முக்கியமல்ல. யாரை வரக்கூடாதோ அவர்களை வர கூடாது என அனைவரும் சேர்ந்துள்ளனர். இங்கு நிற்பது கொள்கை அடிப்படை.



இந்த தேர்தலில் ஸ்டாலின் தமிழகத்தை மட்டுமல்ல, டில்லியில் அடகு வைத்த அதிமுகவையும் மீட்க போகின்றார். வேட்பாளர்களை விட மக்கள் தயாராகி விட்டனர் ஆட்சி மாற்றத்திற்காக.

வங்கியில் பணம் வரும் என்று காத்திருந்தனர். ஆனால் பணம் மதிப்பிழந்து, வங்கியே மதிப்பிழந்து விட்டது. ஆயிரம் கோடி வாங்கிய ரீரவ்மோடியை விட்டு விட்டு, கடன் பெற்ற சாதாரண விவசாயிகளை வங்கி நிர்வாகிகள் துன்புறுத்துகின்றனர்.

மாநில சுயாட்சியை வலியுறுத்தியது அண்ணா. ஆனால், இப்போது, அண்ணா பெயரில் உள்ள கட்சியை வைத்துக் கொண்டு டெல்லியில் தன்மானத்தை இழந்து விட்டனர். லேடியா? - மோடியா? என ஜெயலலிதா அப்போது கேட்டார். இப்போது வெட்கம் இல்லாமல், அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி என்று கூறுகின்றீர்களே என கேள்வி எழுப்பினார்.

மடியில் கனம், வழியில் பணம். இவர்களுக்கு அதனால் தான் மோடியை கண்டு பயப்படுகின்றனர். கேட்கின்ற இடத்தில் இருக்கும் தலைவர், இந்தியாவில் ஒரே தலைவர், தளபதி ஸ்டாலின் தான்.

திமுக தான் நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை தமிழர் பிரச்சினையில் இரட்டை வேடம் போடுகின்றனர்.



குல கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விட்டனர். 5,8,10,11,12 வகுப்புகளில் பொதுத்தேர்வை கொண்டு வந்து விட்டனர். உங்களுக்காக, உங்கள் பிள்ளைகளுக்காக நாங்கள் வந்துள்ளோம். வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும், இப்போது வெங்காயத்தை நினைத்தாலே கண்ணீர் தான்.

635 கோடி சமஸ்கிருத செலவு செய்கின்றனர். விலைவாசி ஏற்றம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நாள் தான் ஏப்ரல் 6. உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள், இருள் அகழும். நாடு செழிக்கும் என்றார்.

இந்த பரப்புரையின்போது, திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன், பகுதி கழக பொறுப்பாளர் கார்த்திகேயன், வழக்கறிஞர் வெண்மணி, சிற்றரசு, சந்திரசேகர், இளைஞரணி புவனேஷ் சந்திரசேகரன், முரளி கிருஷ்ணன், நாகராஜசோழன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...