திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற அரசு ஒப்பந்த ஊழியர்: பரபரப்பு!

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற அரசு ஒப்பந்த ஊழியரால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற அரசு ஒப்பந்த ஊழியரால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

திருப்பூர் வேலம்பாளையம் தியாகி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த சந்திரன் தான் கையில் கொண்டு வந்திருந்த 3 லிட்டர் பெட்ரோல் கேனில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் சந்திரனின் தம்பி குமார் அவரது தாய் தனலட்சுமியை ஏமாற்றி 50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பெயரில் எழுதிக் கொண்டு தாயை அடித்து கொடுமைப் படுத்தியதாக கூறினார். மேலும் இதுகுறித்து பலமுறை போலீசாரிடமும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தனது தம்பி குமாரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்து தனது சொத்துக்களை மீட்டு தரவேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சந்திரனை தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள இந்தச் சூழலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஒப்பந்த ஊழியர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...