கோவை: இலங்கை போர்க் குற்றம் தொடர்பான ஐ.நா. வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது படுபாதகச் செயல் என்று திருச்சி சிவா எம்.பி. கூறியுள்ளார்.
கோவை: இலங்கை போர்க் குற்றம் தொடர்பான ஐ.நா. வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது படுபாதகச் செயல் என்றுதிருச்சி சிவா எம்.பி. கூறியுள்ளார்.
கோவை வடக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் வ.ம.சண்முகசுந்தரத்தை ஆதரித்து கோவை மணியகாரம்பாளையத்தில் தி.மு.க. மக்களவை உறுப்பினர் திருச்சி சிவா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்கள் விரோத சட்டங்களுக்கு துணை போகும் அரசாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் பேருந்து கட்டணங்கள் உயர்ந்திருக்கிறது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுக்கப்படும். இலவசம் என்றதும் ஓசிப் பயணம் என்று நினைக்கக் கூடாது, அந்தக் கட்டணத்தை அரசே செலுத்தும் என்பதுதான் நிதர்சனம்.
கொரோனா காலத்தில் பணக்காரர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை வைத்துச் சமாளித்தார்கள். ஆனால் ஏழைகள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பெரும் இன்னல்களைச் சந்திக்க நேரிட்டது. அதற்காக அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5,000 ரூபாய் நிதி உதவி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அ.தி.மு.க. அரசு அதை ஏற்க மறுத்தது. அதனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கலைஞர் பிறந்தநாளன்று அனைத்து குடும்பங்களுக்கும் 5,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
மகளிர் தினத்தன்று நான் மக்களவையில் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்தேன். அதாவது பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு வரி விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. தற்போது, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் இலவசம் என்று வாக்குறுதி தந்திருக்கிறோம். அதுதான் தி.மு.க,. மக்களின் தேவையை உணர்ந்து செயல்படும் கட்சி தி.மு.க.
இந்திய தேசத்தில் வேற்றுமைகள் உண்டு, ஆனால் ஒற்றுமையோடு வாழ்ந்தோம். ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருக்கும் இஸ்லாமிய விரோத சட்டத்தை ஆதரித்து, அது நிறைவேறுவதற்கு முழுமுதற்காரணமாக இருந்தது அ.தி.மு.க. அரசுதான். மறுபுறம் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சி.ஏ.ஏ. சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்துவோம் என்று பொய் வேஷம் போடுகிறார்கள்.
இந்தியாவின் பொருளாதாரத்தை தீர்மானிப்பது விவசாயத் துறையும், பொதுத்துறை நிறுவனங்களுமே. ஆனால், அதை இன்று மத்திய பா.ஜ.க. அரசு தனியாருக்கு விற்க முனைப்போடு செயல்பட்டு வருகிறது. அதை எதிர்க்கும் துணிச்சல் தி.மு.க.வுக்குதான் உள்ளது.
ஐ.நா மன்றத்தில் இலங்கை போர்க் குற்றம் தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளாததன் மூலம் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்டு மத்திய பா.ஜ.க. அரசு படுபாதகச் செயலை செய்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.