500 ஏக்கரில்‌ நீண்ட இழை கரிம பருத்தி விளைவிக்க விதை, இயற்கை உரம்‌ வழங்கும்‌ விழா: சைமா நிர்வாகிகள் பங்கேற்பு!

கோவை: 500 ஏக்கரில்‌ நீண்ட இழை கரிம பருத்தி விளைவிக்க விதை, இயற்கை உரம்‌ வழங்கும்‌ விழாவில் சைமா நிர்வாகிகள் பங்கேற்றனர்.


கோவை: 500 ஏக்கரில்‌ நீண்ட இழை கரிம பருத்தி விளைவிக்க விதை, இயற்கை உரம்‌ வழங்கும்‌ விழாவில் சைமா நிர்வாகிகள் பங்கேற்றனர்.

உலகிலேயே இந்தியா அதிக அளவு பருத்தி உற்பத்தியை செய்து வந்தாலும்‌, ஹூட் இழை பருத்தி உற்பத்தியில்‌ மிகவும்‌ பின்தங்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம்‌ பி.டி.பருத்தி தொழில்நுட்பம்‌ அறிமுகப்படுத்தும்‌போது நீண்ட இழை பருத்தியில்‌ மட்டுமே கவனம்‌ செலுத்தியதால்‌ ஒரு காலத்தில்‌ ஆண்டு ஒன்றுக்கு சுமார்‌ 25 லட்சம்‌ பேல்கள்‌ (பேல்‌ ஒன்றுக்கு 170 கிலோ) சாகுபடி செய்து வந்த இந்தியா தற்போது நான்கு முதல்‌ ஐந்து லட்சம்‌ நீண்ட இழைப்‌ பருத்தியை மட்டுமே உற்பத்தி செய்கிறது.



இந்தியா பருத்தி ஜவுளித்‌ தொழில்‌ உலகில்‌ முன்னோடியாக விளங்கி வருவதால்‌ ஆண்டு ஒன்றுக்கு சுமார்‌ 20 லட்சம்‌ பருத்தி தேவைப்படுகிறது. எனவே, மீதியுள்ள 15 லட்சம்‌ பேல்‌ பருத்தியை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. மேலும்‌, சமீபத்தில்‌ கரிம பருத்தியின்‌ சான்றிதழுக்குத் தேவையான தகுதிகளை இந்தியா மற்றும்‌ பன்னாட்டுச் சான்றிதழ்‌ நிறுவனங்கள்‌ தீவிரப்படுத்தியுள்ளதால்‌, இந்தாண்டு கரிம பருத்திக்கு பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் இவ்விரு பருத்தி ரகங்களின்‌ உற்பத்தியை அதிகரித்து இந்தியா தன்னிறைவு பெற்றிட ஒரு குழுவை நியமித்து கூடிய விரைவில்‌ புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளது.

இதுகுறித்து சைமா பருத்தி மற்றும்‌ ஆராய்ச்சிக் கழகத்தின்‌ தலைவர்‌ ஆர்‌.ரவிச்சந்திரன்‌ கூறியதாவது:-‌ இந்தியாவில்‌ முதன்முறையாக நீண்ட இழை கரிம பருத்திக்கென்று கோவையிலுள்ள பிர்காட்‌ நிறுவனம்‌ முன்வந்த சைமாவுடன்‌ ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ சுமார்‌ 500 ஏக்கர்‌ நிலப்பரப்பில்‌ நீண்ட இழை கரிம பருத்தியை விளைவிக்க வேண்டிய பருத்தி விதை, இயற்கை உரம்‌ மற்றும்‌ இதர இடுபொருட்களை இலவசமாக வழங்கும்‌ விழா இன்று தமிழகத்தின்‌ நாமக்கல்‌ மாவட்டத்தில்‌ உள்ள செம்மாண்டப்பட்டி கிராமத்தில்‌ நடைபெற்றது.

பிரீகாட்‌ நிறுவனம்‌ இப்பொருட்களை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கியது. சுமார்‌ 250-க்கும்‌ மேற்படிபட்ட விவசாயிகள்‌ இவ்விழாவில்‌ கலந்து கொண்டு பயனடைந்தனர். இன்று வழங்கப்பட்ட நீண்ட இழை கரிம பருத்தி சுமார்‌ 33 மில்லி மீண்டருக்கு அதிகமான இழை நீளத்தையும்‌, 160 நாட்களில்‌ சாகுபடி செய்யும்‌ அளவிலும்‌, குறைந்தபட்சம்‌ 10 குவிண்டால்‌ ஏக்கருக்கு உற்பத்திதரும்‌ விதத்திலும்‌ சைமாவால்‌ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 500 ஏக்கர் நிலப்பரப்பையும்‌ சைமா தொடர்ந்து கரிம விவசாயப் பொருட்களை பயரிடும்‌வகையில்‌ பேணிக்காத்துவரும்‌.‌இப்பகுதி விவசாய பெருங்குடி மக்கள்‌ மிகுந்த ஆர்வத்துடன்‌ கரிம பருத்தி உற்பத்தியில்‌ ஆர்வம்‌ செலுத்துகின்றனர்‌.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவுக்கு‌ சைமா‌ செயலர்‌ மற்றும்‌ தலைமை பருத்தி வளர்ப்பாளர்‌ முனைவர்‌ ஆஷா ராணி முன்னிலை வகித்தார்‌. பிரீகாட்‌ நிறுவனத்தின்‌ மூலப்பொருள்‌ தலைவர்‌ ஜி.கொண்டலசாமி‌ தலைமை உரையாற்றினார்‌. பெஸ்ட்‌ கண்ட்ரோல்‌ இந்தியா பி லிமிடெட்‌ உதவி மேலாளர்‌ ஆர்‌.பாஸ்கர்‌‌ வாழ்த்துரை வழங்கினார்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...