தி.மு.க. ஆட்சி அமைந்த 100 நாளில் குறைகள் அனைத்துக்கும் உடனடியாக தீர்வு காணப்படும்: கவுண்டம்பாளையம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பையா என்ற ஆர்.கிருஷ்ணன் உறுதி!

கோவை: தி.மு.க. ஆட்சி அமைந்த 100 நாளில் குறைகள் அனைத்துக்கும் உடனடியாக தீர்வு காணப்படும் என்று கவுண்டம்பாளையம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பையா என்ற ஆர்.கிருஷ்ணன் உறுதியளித்தார்.


கோவை: தி.மு.க. ஆட்சி அமைந்த 100 நாளில் குறைகள் அனைத்துக்கும் உடனடியாக தீர்வு காணப்படும் என்று கவுண்டம்பாளையம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பையா என்ற ஆர்.கிருஷ்ணன் உறுதியளித்தார்.



தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை மாநகர் மேற்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் இன்று பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியத்தின் அசோகபுரம் மற்றும் குருடம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட காந்தி காலனி, ரங்கம்மாள் காலனி, ஸ்டேட்பேங்க் காலனி, டீச்சர்ஸ் காலனி மற்றும் பழனிக்கவுண்டன்புதூர், வடமதுரை, தொப்பம்பட்டி, கதிர்நாயக்கன்பாளையம், நேருநகர், வெற்றிலைகாளிபாளையம் ஆகிய பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.



அப்போது பேசிய பையா (எ) ஆர்.கிருஷ்ணன், `தி.மு.க. ஆட்சி அமைந்து, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் எங்களது தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல மக்களுக்கான பல எண்ணற்ற நலத்திட்டங்களை செய்வோம். 100 நாட்களில் உங்களது குறைகள் அனைத்துக்கும் உடனடியாக தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தார்.



பிரச்சார பயணத்தின் பது காங்கிரஸ் கட்சியின் கவுண்டம்பாளையம் தொகுதி பொறுப்பாளர் பி.வி.மணி, கொ.ம.தே.க. மாவட்டச் செயலாளர் குழந்தைவேலு, ம.தி.மு.க. தொகுதி பொறுப்பாளர் தங்கவேலு மற்றும் தி.மு.க. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அசோக், செந்தில்ராஜா, குருடம்பாளையம் சரவணன், ஆறுச்சாமி, வேலுச்சாமி, பழனிச்சாமி, ஒன்றிய கழகப் பொறுப்பாளர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம், மாவட்ட அணி அமைப்பாளர்கள் விஜயகுமார், ரங்கநாயகி, ரமேஷ் மற்றும் அரசூர் பூபதி, சிங்கை ரவிச்சந்திரன், சஹா விக்னேஷ் மற்றும் ம.தி.மு.க.வைச் சேர்ந்த விஷ்வராஜ், முத்துசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ராகவன், தம்பி வினோத் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.







Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...