இளைஞர்கள் வாழ்வை சீரழித்த கஞ்சா வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை: கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

கோவை: கஞ்சா வியாபாரம் செய்து பல இளைஞர்களின் வாழ்வை நாசம் செய்த கஞ்சா வியாபாரிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.


கோவை: கஞ்சா வியாபாரம் செய்து பல இளைஞர்களின் வாழ்வை நாசம் செய்த கஞ்சா வியாபாரிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

தேனியைச் சேர்ந்தவர் சோம முத்தையா (வயது 50). இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு கோவை குட்செட் சாலையில் இரண்டு பைகளுடன் நின்று கொண்டிருந்தார். பொதுமக்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போதை தடுப்பு பிரிவு போலீசார் சோம முத்தையா வைத்திருந்த இரண்டு பைகளையும் சோதனை செய்தனர். அதில் 24 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் நடத்திய விசாரணையில் கோவையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதற்காக அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக கோவை இன்றியமையாத பண்டங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மலர் வேலன்டினா கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சோம முத்தையாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீலாக எஸ்.பி.சந்திரசேகர் ஆஜராகி வாதாடியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...