பெண் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகை கொள்ளை: கோவையில் துணிகரம்!

கோவை: கோவையில் பெண் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவையில் பெண் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பீளமேடு ஜி.ஆர்.ஜி.நகரைச் சேர்ந்தவர் கோகிலா (வயது 45). இன்ஜினீயரிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு பள்ளி செல்லும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கோகிலா வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த 22-ஆம் தேதி வெளியூர் சென்றிருந்தார். இன்று காலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 150 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

இதையடுத்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மோப்ப நாய் சகிதமாக வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பணம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் தொழிலதிபர் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...