தவணைத்தொகை கட்டாத அனுமதியின்றி காரை எடுத்துச்சென்ற வங்கி நபர்மீது கோவை எஸ்.பி.யிடம் புகார்!

கோவை: தவணைத்தொகை கட்டாததால் அனுமதியின்றி காரை எடுத்துச்சென்ற வங்கி நபர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை எஸ்.பி.யிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.


கோவை: தவணைத்தொகை கட்டாததால் அனுமதியின்றி காரை எடுத்துச்சென்ற வங்கி நபர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை எஸ்.பி.யிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை ஒண்டிப்புதூரை அடுத்த பட்டணம் புதூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் எம்.அய்யாவு. இவரது கார் கடந்த மாதம் திருட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசில் புகார் கொடுப்பதற்கு முன் அவர் கார் வாங்குவதற்காக லோன் வாங்கியிருந்த தனியார் வங்கியைச் சேர்ந்த நபருக்கு தகவல் தெரிவிப்பதற்காக அழைத்தபோது தவணைத்தொகை செலுத்தாததால் காரை எடுத்துச் சென்று விட்டதாக கூறியிருக்கிறார்.



கொரோனா ஊரடங்கு காலத்தில் தவணைத் தொகை செலுத்தாததால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் காரின் உரிமையாளர் இல்லாத நேரம்பார்த்து காரை எடுத்துச் சென்றுவிட்டதாக சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் வங்கியைச் சேர்ந்த நபர்மீது அய்யாவு குற்றம்சாட்டினார்.



இதையடுத்து தவணைத் தொகை 85 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்தியபிறகும் தனது காரை திருப்பிக் கொடுக்கவில்லை என்று சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையம் சார்பில் சரியாக விசாரிக்காததால் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அய்யாவு நேரடியாக புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் தனது அனுமதியின்றி காரை எடுத்துச் சென்ற நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவதாக எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...