அனைத்து வார்டுகளிலும்‌ இலவச சட்ட சேவை மையங்கள்‌ என கோவை தெற்கு தொகுதிக்கு கமல்ஹாசனின் 25 தேர்தல் வாக்குறுதிகள்..!

கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தெற்கு தொகுதிக்கான தனது 25 சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய வாக்குறுதியை வெளியிட்டுள்ளார்.



கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தெற்கு தொகுதிக்கான தனது 25 சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய வாக்குறுதியை வெளியிட்டுள்ளார்.



1. அனைத்து வார்டுகளிலும்‌ எம்‌.எல்‌.ஏ. அலுவலகம்‌ அமைக்கப்படும்‌. இவை 24 மணி நேர மக்கள்‌ குறை தீர்ப்பு மையங்களாகச்‌ செயல்படும்‌.

2. நீண்ட நாட்களாகப்‌ பட்டா இன்றி தவிக்கும் மக்களுக்கு இலவச நில பட்டா வழங்கப்படும்‌.

3. மத்திய சிறைச்சாலை ஊருக்கு வெளியே மாற்றப்பட்டு, அந்த இடத்தில்‌ மக்கள்‌ வசதிக்காக ஒருங்கிணைந்த மார்க்கெட்‌ பிளாசா அமைக்கப்படும்‌.

4.காந்திபுரம், கிராஸ் கட்‌ ரோடு, 100 அடி சாலை, டவுன் ஹால்‌, ஒப்பணக்கார வீதி அகிய இடங்களில்‌ சுரங்க நடைப்‌ பாதை அமைக்கப்படும்‌.

5. தங்கநகை உற்பத்தியாளர்களுக்கு நலவாரியம்‌ அமைக்கப்படும்‌.

6. தொகுது முழுக்க 6 அடி ஆழத்தில்‌ பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படும்‌.

7. தொகுதியில் அரசு இரத்த வங்கு அமைக்கப்படும்‌.

8.ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லம்‌, அவர்களுக்கு உணவு வழங்கப்படும்‌.மருத்துவக்‌ காப்பீடும்‌ செய்து தரப்படும்‌.

9. அனைத்து வார்டுகளிலும்‌ உடற்பயிற்சிக்‌ கூடம்‌ மற்றும்‌ நூலகங்கள்‌ அமைக்கப்படும்‌.

10. கந்து வட்டி முழுமையாக ஒழிக்கப்படும்‌. சிறு, குறு தொழில்முனைவர்களுக்கு நியாயமான வட்டியில்‌ கடன்‌ கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்‌.

11. அனைத்து வார்டுகளிலும்‌ இலவச சட்ட சேவை மையங்கள்‌ அமைக்கப்படும்‌.

12. பிளாஸ்டிக்‌ பயன்பாடு ஒழிக்கப்படும்‌. பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சு முறையில்‌ பயன்படுத்த குடிசை தொழில்கள்‌

மற்றும்‌ சுய உதவிக்குழுக்கள்‌ ஊக்குவிக்கப்படும்‌.

13. கிராஸ்கட்‌ ரோடு உள்ளிட்ட வர்த்தக சாலைகளில்‌ சோலார்‌ சாலைகள்‌ அமைக்கப்படும்‌.

14. அனைத்து வார்டுகளிலும்‌ திறன் மேம்பாட்டு முகாம்கள்‌ அமைக்கப்படும்‌.

15. தொகுதி முழுக்க சுத்தமான குடிநீர்‌ சீராக விநியோகிக்க உறுதி செய்யப்படும்‌.

16. அனைத்து வார்டுகளிலும்‌ தெரு விளக்குகள்‌ சரியாக செயல்படுவது உறுதி செய்யப்படும்‌.

17. சுத்தமான சுகாதாரமான கோவையாகத்‌ திகழ அனைத்து நடவடிக்கைகளும்‌ எடுக்கப்படும்‌. குடக்கழிவு மேலாண்மை உறுதி செய்யப்படும்‌.

18. அரசன்‌ சேவைகள்‌ வீடு தேடி வரும்‌.

19. அம்பேத்கார்‌ வீடு மற்றும்‌ அரசு பள்ளிகளில்‌ சுகாதாரமான குடிநீர் மற்றும்‌ கழிவறை வசதி, கழிவுநீர்‌ மேலாண்மை வசதி செய்து தரப்படும்‌.

20. ஆதரவற்ற இல்லங்களில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளில்‌ முன்னுரிமை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்‌.

20. போட்டி தேர்வுகளுக்குப்‌ பயிற்சி அளிக்கும்‌ இலவச மையங்கள்‌ அமைக்கப்படும்‌.

21. போக்குவரத்து நெரிசல்‌ குறைய நடவடிக்கை எடுக்கப்படும்‌. பாலம்‌ கட்டும்‌ பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்படும்‌.

22. அமைப்புசாரா தொழிலாளர்களின்‌ நலன்கள்‌ பேணப்படும்‌.

23. அரசாங்கம்‌, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன்‌ இணைந்து பொது இடங்களில்‌ பெண்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகள்‌ ஏற்படுத்துத தரப்படும்‌.

24. பொது மக்களின்‌ பங்களிப்போடு நீர்நிலைகள் முறையாகப்‌ பராமரிக்கப்படும்‌.

25. ஓவ்வொரு அரசு பள்ளிகளிலும்‌ மாணவர்களுக்கு வழிகாட்டும்‌ வகையில்‌, பள்ளிக்கல்வி மூத்த மாணவ மாணவியரை உட்படுத்தி மாணவர்‌ நண்பர்கள்‌ அமைப்பு உருவாக்கப்படும்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...