மூன்று மாதத்திற்கு ஒரு முறை மக்கள் கூட்டம் நடத்துவேன் - அதிமுக சிங்காநல்லூர் வேட்பாளர் ஜெயராம் வாக்குறுதி

கோவை: சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கேஆர் ஜெயராம் இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.


கோவை: சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கேஆர் ஜெயராம் இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.



பிரச்சாரத்தின் இடையே நம்மிடம். பேசிய வேட்பாளர் கே ஆர் ஜெயராம், கடந்த 2016 தேர்தலில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் திமுகவுக்கு வாய்ப்பு அளித்தனர். ஆனால், அந்தக் கட்சியின் எம்எல்ஏ கார்த்திக் தொகுதி வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வாக்காளர்கள் என்னிடம் தங்கள் தொகுதியில் திமுக எம்எல்ஏவை பார்த்ததே இல்லை என்று கூறுகின்றனர். அந்த அளவுக்கு அவரது செயல்பாடு மோசமாக இருந்துள்ளது.

அவரால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருந்த நிலையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி உத்தரவின்பேரில் சிங்காநல்லூர் தொகுதி திமுக வெற்றி பெற்ற தொகுதி என்று எந்த பாரபட்சமும் பாராமல், அந்த தொகுதியில் உள்ள மக்களுக்கு அனைத்து நல உதவி பொருட்களும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எங்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் எங்கள் கட்சி சார்பில் நான் உள்ளிட்ட. அனைத்து கழக தோழர்களும் இணைந்து மக்களுக்கு தேவையான நல உதவி பொருட்கள் வீடு வீடாக சென்று வழங்கினோம். தற்போது, அந்த நன்றியை மக்கள் நினைத்துப் பார்த்து நான் செல்லும் இடங்களிலெல்லாம் என்னை வாழ்த்தி வரவேற்கின்றனர்.



நான் வெற்றி பெற்றவுடன் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மக்கள் கூட்டம் நடத்தப்பட்டு நிறை, குறை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்த மக்களுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வேன்.

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தற்போது காணப்படும் அனைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண துரித நடவடிக்கை எடுப்பேன், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...