கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் கசடு கழிவு மற்றும் நச்சுத்தொட்டி அப்புறப்படுத்தும் பணியாளர்களுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., இன்று துவக்கி வைத்து, பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

கோவை மாநகராட்சி, புதுதில்லி தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய தூய்மைப் பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் நோடு தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும், கசடு கழிவு அப்புறப்படுத்தும் பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியானது இன்று 24.03.2021 மற்றும் நாளை 25.03.2021 ஆகிய இரு தினங்கள் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெறுகின்றது.
இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியினை துவக்கி வைத்த ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது,
கோவை மாநகராட்சி பகுதிகளிலுள்ள மாநகராட்சி மற்றும் தனியார் கழிவுநீர் வாகனங்களில் பணிபுரியும் பணியாளர்களை கழிவு தொட்டி, பாதாள சாக்கடை, நச்சுத்தொட்டி ஆகிய பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது, இயந்திரங்களை கொண்டுதான் பயன்படுத்த வேண்டும்.
மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் சாக்கடை, கழிவுநீர் தொட்டி, நச்சுத்தொட்டி பணிகளின் மூலம் உயிரிழப்புகளை தவிர்க்கும் வண்ணம் இயந்திரங்களைக் கொண்டு சுத்தம் செய்யும்போது, கிளவுஸ், மாஸ்க், ஹெல்மெட் ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் அணிந்து பணிபுரிய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மனிதர்கள் பாதாள சாக்கடை, கழிவுநீர் தொட்டி, நச்சுத்தொட்டிகளில் இறங்கக் கூடாது, கழிவுநீர் தொட்டி, பாதாள சாக்கடை, நச்சுத்தொட்டி சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தினால் சம்மந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் அணிந்து பணிபுரிய வேண்டும், இதற்கு என பிரத்யேக தொலைபேசி எண்: 0422-14420 என்ற எண் மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்த மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சிப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மரபுசாரா எரிசக்தி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனம், நோடு தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியா முனைவர்.எஸ்.காமராஜ் அவர்கள், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், நோடு தொண்டு நிறுவன தலைவர் கே.சத்யஜோதி, மேற்கு மண்டல செயற்பொறியாளர் சரவணக்குமார், சுகாதார அலுவலர் தூய்மை பாரத திட்டம் திருமால், மேற்கு மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.