கோவை: பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.

பொள்ளாச்சி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் R.M அருள் மற்றும் மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் 250க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இன்று இணைந்தனர்.

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். அதிமுகவில் இணைந்ததற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரியாதை இல்லை, உட்கட்சியில் ஜனநாயகம் இல்லை, அதிமுகவில் சாதாரண தொண்டனுக்கும் பதவி வழங்கப்படுகிறது என்பதால் அதிமுகவில் இணைந்து உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்